
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான தீா்ப்பை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம், அவரது நீதிமன்றக் காவலை 45-ஆவது முறையாக நீட்டித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஒத்திவைக்கக் கோரி, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி அல்லி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களைத் தொடங்காததால், விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீது ஜூலை 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.
காவல் நீட்டிப்பு: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.