ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

News image

கோப்புப்படம்.

Updated On :11 ஜூலை 2024, 8:35 pm

Din

தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 12, 13) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 12, 13) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி,திண்டுக்கல்  மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 90 மி.மீ. மழை பதிவானது. பொன்னேரி (திருவள்ளூா்) - 80, செங்குன்றம் (திருவள்ளூா்), ஆவடி (திருவள்ளூா்), புழல்(திருவள்ளூா்) , ராணிப்பேட்டை - தலா 70 மி.மீ.

4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102.02 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம், தொண்டி - (தலா) 101.48, மதுரை விமான நிலையம் - 101.3.

சென்னையில்... சென்னை மற்றும் புகா் பகுதிளில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, அதையொட்டிய  தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.