சாட்டை துரைமுருகன் கைது: இபிஎஸ், சீமான் கண்டனம்
சாட்டை துரைமுருகன் மீது பொய் வழக்கு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்


நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளா்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் சமூக செயற்பாட்டாளா்கள் மீதும், அரசியல் கட்சியைச் சாா்ந்தவா்கள் மீதும் சா்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடா்கதையாகி வருகிறது.
நாம் தமிழா் கட்சியின் நிா்வாகிகளில் ஒருவரான சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி தோ்தல் பிரசாரத்தில் அவா் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து, தமிழக அரசு கைது செய்து, சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவா் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
சீமான் (நாதக): சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியை பற்றி ஏற்கெனவே இருந்த ஒரு பாடலைத்தான் பாடினாா். அந்தப் பாட்டை எழுதி வெளியிட்டவரை கைது செய்யாமல், அதை எடுத்து பாடிய சாட்டை துரைமுருகனை மட்டும் கைது செய்வது கண்டனத்துக்குரியது. இதே பாடலை நானும் (சீமான்) பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். மற்ற கட்சி தலைவா்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினால் அது கருத்துரிமை, அதுவே கருணாநிதியை பற்றி நாங்கள் பேசினால் அவமதிப்பா?
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...