பூந்தமல்லியில் சொத்துத் தகராறு காரணமாக தந்தையை வேன் ஏற்றி கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், பாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). இவரது மகன் வெங்கடேசன்(26). இந்த நிலையில், புதன்கிழமை இரவு ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திடீரென்று வேகமாக வந்த வேன் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் வேன் சக்கரத்தில் சிக்கி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவறிந்து வந்த பூந்தமல்லி போலீஸார் ராஜேந்திரனின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ராஜேந்திரனை அவரது மகன் வெங்கடேசன் வேனை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், ராஜேந்திரன் தனது சொத்துகளை தனது மகள்களுக்கு எழுதி வைப்பதற்கு முடிவு செய்து இருந்ததாகவும், மேலும் ராஜேந்திரனுக்கும், வெங்கடேசனுக்கும் ஏற்கெனவே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததும் தெரியவந்தது.
புகாரின்பேரில், பூந்தமல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து வெங்கடேசனை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்

மரண தண்டனையில் விதிவிலக்கு உண்டு! எப்படி நிறைவேற்றப்படும்?

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


