தமிழகத்தில் மாலை, இரவு வேளைகளில் மழை பெய்ய வாய்ப்பு!
மாலை, இரவு வேளைகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு..


தமிழகத்தில் இன்று (ஜூலை 12) மாலை, இரவு வேளைகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், உள்மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...