சென்னையில் இரு நாள்களில் 77 ரெளடிகள் கைது
சென்னையில் இரு நாள்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 77 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப்படம்
Updated On :15 ஜூலை 2024, 11:21 pm

சென்னை: சென்னையில் இரு நாள்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 77 ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.
ரெளடிகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, காவல்துறையின் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாள்களில் 77 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். ரெளடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும் என காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையில், ரெளடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரித்துள்ளாா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...