குரூப் 2- 2ஏ முதல்நிலைத் தோ்வு: நாளை வரை விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றிரவு 11.59 மணியுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களால் இணைய வழியாக கட்டணம் செலுத்துவதில் சிக்கல் இருந்ததால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், துணை வணிகவரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.
இதேபோன்று, முழுநேர விடுதிக் காப்பாளா், தணிக்கை ஆய்வாளா், நிதித் தணிக்கைத் துறை உதவி ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா் போன்ற பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
நிகழாண்டில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுகளுக்கான அறிவிக்கை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப் 2-இல் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2ஏ-இல் 1,820 பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தோ்வு செப். 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.