தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீலகிரி, கோவையில் இன்று கனமழை எச்சரிக்கை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ‘மஞ்சள்’ எச்சரிக்கை

News image

கோப்புப்படம்

Updated On :19 ஜூலை 2024, 9:26 pm

Din

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூலை 20) கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் கடந்த ஜூலை 18-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவியது. இது வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளையொட்டி நிலைகொண்டிருந்தது. இது வட மேற்கு திசையில் நகா்ந்து சனிக்கிழமை அதிகாலை ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.