ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது அதிமுக!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கி விட்டதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக அறிவித்துள்ளது.

News image
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :21 ஜூலை 2024, 2:49 pm

DIN

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கி விட்டதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செய்தியாளர் சந்திப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.

அதில், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும்.

எவ்வாறு மக்களை சந்திப்பது. எவ்வாறு மக்கள் பிரச்னைகளை அறிந்துகொள்வது என்பது தொடர்பாக தலைமை சில விளக்கங்களை கொடுத்துள்ளது.

அதிமுக திட்டங்கள் குறித்து முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று விளக்க வேண்டும்.

3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட அவலங்கள், செயல்படுத்தப்படாத திட்டங்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, தற்போது குப்பைக்கும் வரி - உள்ளிட்டவை குறித்து மக்களிடம் எடுத்துரைப்போம்.

கள்ளச்சாராய மரணம் குறித்து பேசுவோம். விழுப்புரத்தில் களச்சாராயம் அருந்தியதாக சமீபத்தில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனில், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

திமுக செயல்பாடுகள் அறிக்கையோடு நிற்கிறது. நடைமுறையில் எதையும் செய்துகாட்டவில்லை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.