.jpeg?w=480&auto=format%2Ccompress&fit=max)
மின் கட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கட்சியின் அமைப்புச் செயலரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான கணபதி தலைமை வகித்துப் பேசியது:
திமுக ஆட்சி ஏற்பட்டு 3 ஆண்டுகளில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
நாட்டில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய அரசு நடவடிக்கையில்லை. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சிந்தித்து மக்கள் அமமுக-வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து மின்கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.