நீலகிரி: 4 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் இன்று(திங்கள்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் இன்று(திங்கள்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது.
இருப்பினும், தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாள்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக உதகை, குந்தா, கூடலூா், மற்றும் பந்தலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...