விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 401 கோடி ஒதுக்கீடு

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகின்றது.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :25 ஜூலை 2024, 5:36 am

DIN

தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

உயா் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்கட்டமாக 3.28 லட்சம் மாணவர்கள் தமிழ்ப் புதல்வர் திட்டத்தில் பயன்பெறவுள்ள நிலையில், ரூ. 401.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம்.

ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.