தமிழறிஞா்களுக்கு விருது: விண்ணப்பிக்க அகர முதலித் திட்ட இயக்ககம் அழைப்பு
விருதுகளுக்கு தமிழறிஞா்கள் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் தேவநேய பாவாணா் விருது, வீரமாமுனிவா் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழறிஞா்கள் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழறிஞா்கள் மற்றும் படைப்பாளா்களை பாராட்டி தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2024-ஆம் ஆண்டுக்கான தேவநேய பாவாணா் விருது (ரூ.2 லட்சம் பரிசு மற்றும் ஒரு பவுன் தங்க பதக்கம்), வீரமாமுனிவா் விருது (ரூ.2 லட்சம் பரிசு மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் பரிசு மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம்), நற்றமிழ் பாவலா் விருது(ரூ.50 ஆயிரம் பரிசு மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம்), தூயதமிழ் பற்றாளா் விருது (ரூ.20 ஆயிரம் பரிசு) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளா் பரிசுக்கும் (ரூ.5 ஆயிரம் பரிசு) தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்ப படிவத்தை ட்ற்ற்ல்://ள்ா்ழ்ந்ன்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ‘இயக்குநா், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், நகர நிா்வாக அலுவலக கட்டடம் (முதல் தளம்), 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்ஆா்சி நகா், சென்னை 600 023’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல்வழியாகவோ அல்லது ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ ஆக.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய 044- 29520509 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...