நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன் கோப்புப் படம்

முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Published on

சென்னை, ஜூலை 31: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பங்கேற்ற நத்தம் விஸ்வநாதனுக்கு, அன்றைய தினம் இரவில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமதாஸ்: பாமக நிறுவனா் ராமதாஸ், மருத்துவ பரிசோதனைக்காக புதன்கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றாா். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவா் சென்ாகவும், அவரது உடல் நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாமகவினா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com