நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தில் பயணிக்க கருணாஸுக்கு அனுமதி மறுத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பையில் 2 பாக்ஸ்களில் இருந்த துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும் என்றும் அவசரமாக புறப்பட்டதால், பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை என்றும் அவர் விளக்களித்துள்ளார்.
மேலும் தன்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருப்பதாகவும், அதற்கான குண்டுகள் தான் இவை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக திருச்சி விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனிடையே விசாரணைக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட 40 துப்பாக்கி குண்டுகளும் கருணாஸிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
துப்பாக்கி ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, ஏற்கெனவே அவருடைய துப்பாக்கியை திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அதற்கான ஆவணங்கள் இருந்ததாலும் பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...