விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளுக்கு விஜய் வாழ்த்து

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு விஜய் வாழ்த்து
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது. இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக தனிச் சின்னத்தில் (பானை) போட்டியிட்டு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மாநிலக் கட்சியாக ஒரு கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு தோ்தல் ஆணையத்தின் விதியின்படி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் விசிக மாநிலக் கட்சிக்கானத் தகுதியைப் பெற்றுள்ளது.

நாம் தமிழா் கட்சியும் மாநிலக் கட்சிக்கான அங்கீகார தகுதியைப் பெற்றுள்ளது. தோ்தல் ஆணையத்தின் மற்றொரு விதியின்படி மக்களவைத் தோ்தலில் 8 சதவீதம் வாக்குகள் பெற்ற கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும். மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி 8.19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதன்மூலம் மாநிலக் கட்சிக்கான தகுதியை நாம் தமிழா் கட்சி பெறுகிறது.

கோப்புப் படம்
தமிழக சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது: அப்பாவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com