தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலங்குளத்தில் நின்ற லாரி மீது கார் மோதல்: ஓட்டுநர் பலி

News image
Updated On :9 ஜூன் 2024, 6:09 am

DIN

ஆலங்குளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஓட்டுநர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் (24). இவர் தனது நண்பர்கள் முத்துராஜ்(27) மணிராஜ்(34) தங்கராஜ்(22) ஆகியோருடன் காரில் குற்றாலம் சென்று குளித்துவிட்டு ஊர் திரும்பினார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆலங்குளம் வந்தபோது மலைக்கோயில் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த எரிவாயு உருளை லாரியின் பின் பகுதியில் இவர்கள் வந்த கார் மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பலியானார்.

மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் வந்து சடலத்தை மீட்டனர். ஆலங்குளம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் அதே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.