

நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்க்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி கூறியுள்ளார்.
நாம் தமிழா் கட்சியும் மாநிலக் கட்சிக்கான அங்கீகார தகுதியைப் பெற்றுள்ளது. தோ்தல் ஆணையத்தின் விதியின்படி மக்களவைத் தோ்தலில் 8 சதவீதம் வாக்குகள் பெற்ற கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
இந்தத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி 8.19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதன்மூலம் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாக திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகிய 4 கட்சிகள் உள்ளன.
அதைப்போல தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தில் உள்ள கட்சிகளாக காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் உள்ளன.
இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் விஜய்யின் வாழ்த்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி கூறியுள்ளார். அதில், “மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி!” என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.