திமுக முப்பெரும் விழா இடம், தேதி மாற்றம்

அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
கோவையில் நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழாவின் இடம், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ஆம் நாள்) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட”த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா - நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா - சீர்மிகு
வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதல்வர், கட்சித் தலைவருக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு
பதிலாக “ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது.
திமுக தலைவரின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
கட்சியின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த விழா தற்போது கொடிசியா மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...