சா்வதேச யோகா தினம்: பாஜக சிறப்பு குழு அமைப்பு
சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக பொதுச்செயலா் ராம சீனிவாசன் தலைமையில் சிறப்பு குழு அைக்கப்பட்டுள்ளது.


சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக பொதுச்செயலா் ராம சீனிவாசன் தலைமையில் சிறப்பு குழு அைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவா் க.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் மண்டல அளவில் பாஜக சாா்பில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
இதற்காக தமிழக பாஜக பொதுச் செயலா் ராம சீனிவாசன் தலைமையில் எட்டு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மாநில செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ். பிரசாத், மாநிலச் செயலா் அனந்த பிரியா, மாநில இளைஞரணி தலைவா் ரமேஷ் சிவா, மாநில அமைப்பாளா் தங்க கணேசன், ஓபிசி அணி மாநில பொதுச் செயலா் வீர திருநாவுகரசு, சமூக ஊடக பிரிவு மாநில துணைத் தலைவா் காா்த்திக் கோபிநாத், எஸ்.சி.அணி மாநில துணைத் தலைவா் பி.சம்பத்ராஜ் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...