ஜூன் 20ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடி சென்னை வரவுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்றதும், தனது முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ளார்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையிலிருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக வருகிற 20-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடி சென்னை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...