கல்லீரல் புற்றுநோயைக் குணப்படுத்தும் செருப்படை மூலிகை

தமிழக கிராமங்களில் காணப்படும் செருப்படை மூலிகை கல்லீரல் புற்றுநோயைக் குணப்படுத்தும்
செருப்படை மூலிகை
செருப்படை மூலிகை
Published on
Updated on
1 min read

தமிழக மக்களால் வாத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வந்த செருப்படை மூலிகை, கல்லீரல் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் என்று சென்னை பல்கலைக்கழகமும், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் செருப்படை மூலிகை பரவலாக பல்வேறு நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த மூலிகையின் மருத்துவக் குணங்கள் குறித்து அறிவியல் ஆய்வாளர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் ஒட்டேரிப்பாளையம் பகுதிகளில், நெல் அறுவடை செய்தபிறகு அங்கு விளைந்திருந்த செருப்படை மூலிகைகளை சேகரித்து வந்து ஆய்வுக்கு உள்படுத்தினர். அதாவது, தாவர ஹெர்பேரியம் மாதிரி, அதாவது உலர்ந்த இலைகளின் மாதிரி, தாம்பரத்தில் உள்ள தாவர உடற்கூறியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மறைந்த தாவர வகைபிரித்தல் பேராசிரியர் ஜே ஜெயராமனால் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

செருப்படை மூலிகை
டீம் மெலோடி: பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் மெலோனி பகிர்ந்த விடியோ

இந்த தயாரிப்பானது, மரபணு கோளாறு, புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை போன்ற பல்வேறு ஆய்வுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த இலைகளில், புற்றுநோய் தடுப்புக்கான ஆற்றல் அதிகம் இருப்பதையும், கல்லீரல் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு இது சிறந்த மருந்தாக இருப்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

உயிரி வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் என்ற மருத்துவ இதழில் இது தொடர்பான ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள், என பானுப்ரியா ரவிச்சந்திரன், எஸ். ஏழுமலை, சரவணன் கோவிந்தசாமி குப்புசாமி மற்றும் பார்த்தசாரதி பெருமாள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com