காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நீலகிரி, கோவைக்கு இன்று ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

News image
Updated On :22 ஜூன் 2024, 9:30 pm

Din

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஞாற்றுக்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

‘ஆரஞ்ச்’, ‘மஞ்சள்’ எச்சரிக்கை: இதில் நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 23-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 23-இல் திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், ஜூன் 24, 25-ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி  மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: இதனிடையே, தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோடு - 100.58, கடலூா் - 100.4, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி - (தலா) 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 23 முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 23, 24-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் ஜூன் 23 முதல் 26 வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் , மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.