கள்ளக்குறிச்சி சம்பவம்: நேரில் சென்று நலம் விசாரித்த கமல்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சேலத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று(ஜூன் 23) பலியாகிய நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் 106 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரியில் 17 பேரும், சேலத்தில் 30 பேரும் என மொத்தம் 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

