இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சென்னைக்கு விமானப் பயணம்

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் முதல் விமானப் பயணம்

News image
மதுரை விமான நிலையத்தில் சென்னை செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்களை வழியனுப்பி வைத்த மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார் மற்றும் மண்டலத்தலைவர் சுவிதா விமல் உள்ளிட்டோர்.
Updated On :24 ஜூன் 2024, 4:49 am

DIN

மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10 மாணவர்களை தனியார் அமைப்பினர் திங்கள்கிழமை விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

ரோட்டரி கிளப் சார்பில் வானில் சிறகடிப்போம் என்ற தலைப்பில் மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10 மாணவ, மாணவியரை தேர்வு செய்து அவர்களை சென்னை அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள் திங்கள்கிழமை மதுரை விமான நிலையம் வந்தனர்.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார், மண்டலத்தலைவர் சுவிதாவிமல் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்து பூ மற்றும் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.

இதைத் தொடர்ந்து 10 மாணவ, மாணவியர் மற்றும் ஒரு ஆசிரியர் என 11 பேர் மதுரையிலிருந்த விமான மூலம் சென்னை புறப்பட்டு சொன்றார்கள்.

சென்னையில் அவர்கள் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு மீண்டும் பேருந்து மூலமாக மதுரை புறப்பட்டு வருகின்றனர்.

வானத்தில் பார்த்த விமானத்தில் முதல்முறையாக செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.