மதுராவில் பள்ளி மாணவர்களை தொழுகை செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர், மாணவர்களை தொழுகை செய்யச் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் ஜான் முகமது மீது தொடக்கக் கல்வி அதிகாரியிடம் பாஜகவின் நௌஜீல் மண்டலத் தலைவர் துர்கேஷ் சௌகான் புகார் தெரிவித்தார்.
புகாரில், மாணவர்கள் தொழுகை செய்ய தலைமை ஆசிரியர் வற்புறுத்துவதாகவும், பள்ளியில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தன்னிடம் முறையிட்டதாக சௌகான் கூறியுள்ளார். இந்தப் புகாரை கவனத்தில் கொண்ட தொடக்கக் கல்வித் துறை, தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
மேலும் இவ்விவகாரத்தில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி அதிகாரி ரத்தன் கீர்த்தி தெரிவித்தார்.
Summary
A principal of a government primary school in Mathura was suspended and an inquiry initiated against him for allegedly asking students to offer namaz, officials said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி பணியிடை நீக்கம்
பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம்: ஊழியா் பணியிடை நீக்கம்
பயணியுடன் மோதல்: ரயில்வே டிக்கெட் பரிசோதகா் பணியிடை நீக்கம்
பள்ளி வகுப்பறையில் முதல்வா் நிகழ்ச்சி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



