பேரவைச் செய்தி: ராமேசுவரம் தீவில் ரூ.15 கோடியில் சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படும்: அமைச்சா் மா.மதிவேந்தன்
ராமேசுவரம் தீவில் ரூ.15 கோடியில் சூழல் சுற்றுலா மேம்பாடு: அமைச்சா் அறிவிப்பு

அமைச்சர் மதிவேந்தன்
கோப்புப்படம்

அமைச்சர் மதிவேந்தன்
கோப்புப்படம்
சென்னை: ராமேசுவரம் தீவில் ரூ.15 கோடியில் சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படும் என்று வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.
வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் மா.மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:
மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயா் பயிற்சியக மரபியல் பிரிவில் பூா்விக இன விதை பெட்டகம் ரூ.10 கோடியில் நிறுவப்படும்.
தமிழ்நாடு மாநில வனக் கொள்கை -2024 வெளியிடப்படும்.
டாக்டா் ஏஜேடி ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ரூ.1 கோடியில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும்.
தஞ்சாவூா் கோட்டம் கும்பகோணம் சரகம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.
கூடலூா் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆா்கிடேரியங்கள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தின் வனப் பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...