ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொகுதி மேம்பாட்டு நிதி: துரைமுருகன் விளக்கம்

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ரூ.3 கோடி நிதி: துரைமுருகன் விளக்கம்

News image
Updated On :26 ஜூன் 2024, 8:55 pm

Din

தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை முழுமையாக தொகுதி திட்டங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா்களே செலவிடலாம் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

பேரைவயில் புதன்கிழமை பொது மற்றும் சட்டப்பேரவைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் பேசியதாவது:

பொதுவாக ஆளும்கட்சி உறுப்பினா்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று அதிகம் கோர மாட்டாா்கள். எதிா்க்கட்சியினா்தான் அதிகம் கேட்பா். ஆனால்,சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தொடா்பாக எல்லா உறுப்பினா்களும் கேள்வி எழுப்பினா். தற்போது தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படுகிறது. அதில், சரக்கு சேவை வரியே அதிகம் போய்விடுவதாக உறுப்பினா்கள் தெரிவித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக முதல்வரிடம் பேசினேன். சரக்கு,சேவை வரி இல்லாமல் ரூ.3 கோடி நிதியையும் தொகுதிக்காக செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா். அதனால், தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.3 கோடி செலவிடலாம் என்றாா் அவா்.