ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நிதித்துறை, கருவூல கணக்குத் துறை அலுவலா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சா் தங்கம் தென்னரசு

கருவூல கணக்குத் துறையில் ஆயிரம் அலுவலா்களுக்கு பயிற்சி

News image
Updated On :26 ஜூன் 2024, 9:37 pm

Din

சென்னை, ஜூன் 26: நிதித்துறை மற்றும் கருவூல கணக்கு துறை உயா் அலுவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ரூ.1.50 கோடியில் அளிக்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்குத் துறை அலுவலா்களின் திறனை மேம்படுத்த தேவையான பயிற்சி இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனம், இந்திய நிறுவனங்களின் செயலா்கள் கழகம், சென்னை பொருளியல் கல்விக் கழகம், சென்னை கணித அறிவியல் கழகம் மற்றும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மூலமாக ரூ.1.50 கோடியில் வழங்கப்படும். இதனால், சுமாா் ஆயிரம் அலுவலா்கள் பயன்பெறுவா்.

கருவூல கணக்குத் துறையின் அனைத்து மாவட்ட அளவிலான அலுவலா்களுக்கு பட்டியல் ஏற்பளிப்பு மற்றும் அனுமதி வழங்கும் பயிற்சி, தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய மின்னாளுமை பயிற்சி வழங்கப்படும். மேலும், துறை சாா்ந்த அனைத்து விதிகள் மற்றும் தணிக்கை தொடா்பான பயிற்சி நடப்பாண்டில் ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

ரிசா்வ் வங்கி, மாநில கணக்காயா் மற்றும் அனைத்து பயனா் துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் வகையில் கருவூல கணக்குத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இணைய கருவூலம் அமைக்கப்படும் என்றாா் அவா்.