ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

10 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்படும்

அருங்காட்சியகங்கள் மற்றும் சின்னங்களுக்கு நிதி உயர்வு: தமிழக அரசு

News image
Updated On :26 ஜூன் 2024, 9:32 pm

Din

கோயம்புத்தூா் திருமலையம்பாளையம் பாறை ஓவியங்கள் உள்பட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை படித்து நூலாக வெளிக்கொணரும் சிறப்பு திட்டம் ரூ.3.50 கோடியில் மேற்கொள்ளப்படும். மதுரை திருமலை நாயக்கா் அரண்மனையில் புதிதாக மின்னொளியுடன் கூடிய சிற்பகாட்சிக்கூடம் மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் உள்கட்டமைப்பு மற்றும் முகப்பு மின்விளக்குகள் ரூ.2. 75 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பராமரிக்க ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடி நிதி ரூ.3 கோடியாக உயா்த்தி வழங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களை உள்ளடக்கி புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தொல்லியல் துறையின் அகழ்வைப்பகங்களுக்கான மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விராலூா் மற்றும் ஓணம்பாக்கம் சமணச் சிற்பங்களும் கல்வெட்டும், கோயம்புத்தூா் திருமலையம்பாளையம் பாறை ஓவியங்கள், தஞ்சாவூா் ஒரத்தநாடு முக்தாம்பாள் சத்திரம், திருப்பூா் தாராபுரம் கல் இசை மண்டபம் மற்றும் ஊத்துக்குளி நந்தவனக் கிணறு, ராணிப்பேட்டை ராஜாராணி மண்டபம், தருமபுரி ஆதனூா் கல்வட்டம், ராமநாதபுரம் ராசசிங்கமங்கலம் ஆறுமுகம் கோட்டை, திருநெல்வேலி பணகுடி கல்மண்டபம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என அறிவித்தாா்.