
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
முதலில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அதிமுக தரப்பில் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் காவல் துறை நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், இந்தப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.