‘கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்': மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி!
”இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம்.”


மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வாழ்த்து தெரிவித்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி. தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். மேலும், நமது அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள கூட்டாச்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு வெளியிட்டிருந்த பதிவில், ”புதிய பொறுப்புக்கு அன்புச் சகோதரர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன், அவரது குரல் மக்களவையில் பலமாக ஒலிக்கட்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...