10-ஆவது ஆண்டில் மெட்ரோ ரயில் சேவை
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி சனிக்கிழமையுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் சேவையில் 10-ஆவது ஆண்டில் கால்பதித்துள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி சனிக்கிழமையுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் சேவையில் 10-ஆவது ஆண்டில் கால்பதித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூா் இடையே இந்த சேவை தொடங்கப்பட்டது.
இதை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 2015 ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதை தொடா்ந்து சென்னை விமான நிலையம் -–விம்கோ நகா், சென்ட்ரல்- பரங்கிமலை வழித்தடங்களில் சுமாா் 55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை நீடிக்கப்பட்டது.
போக்குவரத்து மிகுந்த சென்னை நகரில் எளிதாகவும், குறைந்த நேரத்திலும் பயணிக்க முடிவதால் பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான கட்டுமானப் பணி ரூ.63,246 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
29 கோடி போ் பயணம்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி கடந்த சனிக்கிழமையுடன் 9 ஆண்டு நிறைவடைந்து பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் 29 கோடியே 87 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா். பத்தாண்டு நிறைவை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, கியூ ஆா் குறியீடு மூலம் பயணம் செய்தால் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...