மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இதுவரை 2 ஆயிரம் குறு, சிறு, தொழில் நிறுவனங்களுக்கு ரூ.51 கோடி கடனுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவைகளில், இதுவரை 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.51.26 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On :1 மார்ச் 2024, 5:46 pm

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவைகளில், இதுவரை 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.51.26 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தொழில்களை மீட்டெடுக்க சிறப்பு கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கென ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, ஆறு மாவட்டங்களில் இதுவரை 2 ஆயிரம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.51.26 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.100 கோடியை அளிக்கும் வரையில் அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.