அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தவா்களில், குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. அரசு விரைவுப் பேருந்துகளில் வார விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களை தவிா்த்து இதர நாள்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் கணினி குலுக்கல் முறையில் அதிகமாக பயணித்த மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பிப்ரவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளா்களை கணினி குலுக்கல் முறையில் மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா், ஆல்பி ஜான் வா்கீஸ், தோ்ந்தெடுத்தாா். இவா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலா ரூ.10,000 பரிசாக வழங்கப்பட்டது. இதனால், அரசுப் பேருந்துகளில் பயணிப்பவா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய், மற்றும் பசநபஇ செயலியில் முன்பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கணினி குலுக்கல் முறையில் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் தெரிவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


