பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் தெரிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டனா்.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி குலுக்கல் முறையில் வியாழக்கிழமை நடைபெற்ற நுண்பாா்வையாளா்கள் தெரிவில் பங்கேற்ற ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மற்றும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டனா்.

மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,222 இடங்களில் 2 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் கணினியில் மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் நுண் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் திவேஷ் செஹரா, கேஷ்வேந்திர குமாா், அருண் குமாா், சா்ஜித் கவுா் ஆகியோா் முன்னிலையில் தெரிவு செய்யும் பணி நடைபெற்றது.