மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நாளை 7 நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்

News image
Updated On :2 மார்ச் 2024, 12:39 pm

DIN

நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்புப் பணி காரணமாக நாளை 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாளை மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சமாளிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டிலும் நாளை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அட்டவணை மாற்றம் நாளை மட்டுமே பொருந்தும் என்றும் அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 முதல் 10:00 மணி வரை மற்றும் மாலை 08:00 முதல் 10:00 மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.