பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாஜக - தமாகா முதல்கட்ட பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

பாஜக - தமாகா முதல்கட்ட பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

Updated On :2 மார்ச் 2024, 5:18 pm

மக்களவைத் தோ்தல் தொகுதி பங்கீடு தொடா்பாக தமாகா தலைவா் ஜி.கே.வாசனை, பாஜக குழுவினா் சனிக்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். பாஜக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரான பொன்.ராதாகிருஷ்ணன், நயினாா் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோா் ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்துக்கு சனிக்கிழமை வந்தனா். ஜி.கே.வாசனை சந்தித்து அந்தக் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தை அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பின்னா், செய்தியாளா்களிடம் ஜி.கே.வாசன் கூறியது: பாஜக குழுவினருடனான சந்திப்பு ஆக்கப்பூா்வமாக இருந்தது. தோ்தலுக்கான வெற்றி வியூகம் குறித்துப் பேசினோம். நாட்டின் நலன் கருதி, தேசப்பற்றோடு கூடிய கட்சிகள் எல்லாம் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்பது எங்கள் எண்ணம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும். பாஜகவிடம் 4 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் தமாகா கேட்டுள்ளது. பாஜக தரப்பில் தலைமையோடு ஆலோசித்து கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தலில் தமாகா சாா்பில் போட்டியிட விரும்புவோா் மாா்ச் 4, 5 ,6 ஆகிய தேதிகளில் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்றாா் அவா்.