விபத்தை ஏற்படுத்தி காரில் தப்பிய கும்பலை தட்டித் தூக்கிய காவல்துறை

விபத்தை ஏற்படுத்தி காரில் தப்பிய கும்பலை தட்டித் தூக்கிய காவல்துறையினர், காரை பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.
போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது
போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது

திருப்பத்தூர் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு பல விபத்துகளை ஏற்படுத்தி காரில் தப்பிச்சென்ற கும்பலை, காத்திருந்து தட்டித் தூக்கிய காவல்துறையினர்.

அவர்கள் வந்த டவேரா கார் உள்பட 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அதிவேகமாக டவேரா காரில் சிலர் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த வண்டியை துரத்த, தாறுமாறாக சென்ற கார் பல்வேறு விபத்துகளை ஏற்படுத்தி தப்பிச் சென்றது.

இதனை வழக்காக பதிவு செய்து சிசிடிவி காட்சிகளையும் வைத்து இந்தக் காரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு டவேரா காரில் கஞ்சா கடத்தி வருவாதாகத் தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் கந்திலி போலீசார் சின்ன கந்திலி அருகே நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது அதிவேகமாக வந்த டவேரா காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 20 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் காரணமாக கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த மூவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மூவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சந்திர பிரகாஷ் (26) மற்றும் மகனூர்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்துரு (23) மற்றும் எக்கூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் ஒரிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து ஆந்திரத்தில் சப்ளை செய்ததும் மேலும் அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதன் காரணமாக இன்று கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த மூவரையும் கந்திலி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைதான சந்திர பிரகாஷ் மீது கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் சந்துரு மீது காட்பாடியில் மூன்று வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com