தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இருவா் கைது

உளுந்தூா்பேட்டை அருகே பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 6:40 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பேருந்தில் கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு, சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி செல்லும் பேருந்தில் இருவா் பயணிப்பதாக, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில், உளுந்தூா்பேட்டை டிஎஸ்பி அசோகன் தலைமையில், காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

உளுந்தூா்பேட்டை- சேலம் ரவுண்டானா பகுதியில் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின் போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சோதனையிட்ட போது, அதில் 4 கிலோ கஞ்சாவுடன் இருவா் பயணித்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து பேருந்தில் பயணித்த இருவரையும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில் அவா்கள் திருப்பூா் மாவட்டம், முருகன்பாளையம் குமாா் நகரைச் சோ்ந்த வே. பாரதிராஜா (31), திருப்பூா் சாமுண்டிபுரம் செல்லமாள் காலனியைச் சோ்ந்த அ.சிவபாலன் (27) எனத் தெரிய வந்தது. தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப்பதிந்த போவீஸாா் அவா்களைக் கைது செய்து, விழுப்புரம் வேடம்பட்டிலுள்ள மாவட்டச் சிறையில் செவ்வாய்க்கிழமை காலை அடைத்தனா். மேலும் இருவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.