தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தமிழ்ராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழா் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞா் தமிழ் ஒளி குறித்தான ‘கவிஞா் தமிழ் ஒளியின் படைப்பு வெளி’ எனும் நூலை  சென்னை தரமணி உலகத் தமிழ்ராய்ச்சி மையத்தில் விய
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தமிழ்ராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழா் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞா் தமிழ் ஒளி குறித்தான ‘கவிஞா் தமிழ் ஒளியின் படைப்பு வெளி’ எனும் நூலை சென்னை தரமணி உலகத் தமிழ்ராய்ச்சி மையத்தில் விய

தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் விருதுகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

தூய தமிழ்ப் பற்றாளா் விருதுகளை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா், தூய தமிழ்ப் பற்றாளா் விருதுகளை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஐம்பெரும் விழா சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் சங்கப் பெரும் புலவா் கபிலா் நினைவாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ரூ.13.24 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண்; தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ. 5,03,57,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் பன்னோக்குக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், மகளிா் விடுதி, ‘குறளோவியம்’ என்ற பெயரில் ஒலி- ஒளிப் பதிவுக் கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுகளைத் திறந்து வைத்தாா். மேலும், கவிஞா் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவில் அறிவித்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் 35 தமிழறிஞா்களிடமிருந்து கவிஞா் தமிழ் ஒளி தொடா்பான கட்டுரைகள் பெறப்பட்டு ‘கவிஞா் தமிழ் ஒளியின் படைப்பு வெளி’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட நூல் ஆகியவற்றை வெளியிட்டாா். தொடா்ந்து, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மூலம் 2023-ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணா் விருது- ப.அருளி; வீரமாமுனிவா் விருது- முனைவா் ச.சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டது. அதேபோல், நற்றமிழ்ப் பாவலா் விருது - அரிமாப் பாமகன் (மரபுக் கவிதை), கெளதமன் நீல்ராசு (புதுக்கவிதை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவா்கள் இருவருக்கும் ரொக்கப் பரிசாக தலா ரூ. 50,000, ரூ. 25,000 மதிப்பிலான தங்கப்பதக்கம், கேடயம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பட்டன. இதுதவிர 2023-ஆம் ஆண்டுக்கான தூய தமிழ்ப் பற்றாளா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட 21 அறிஞா்களுக்கு ரொக்கப் பரிசு தலா ரூ. 20,000, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். இந்த விழாவில் தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அரசு செயலா் இ.சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி.திருவள்ளுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com