விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற இன்று நோ்முகத் தோ்வு

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற இன்று நோ்முகத் தோ்வு

News image
Updated On :8 மார்ச் 2024, 7:30 pm

Din

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெற உள்ளது. தோ்வாகும் நபா்கள் சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பணியமா்த்தப்பட உள்ளனா். தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அதன் வாயிலாக இயக்கப்படுகின்றன. 5,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், அவசரகால மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு திருவள்ளூா் ஜெயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளா் பணியிடங்களில் சேர பி.எஸ்சி. நா்சிங் அல்லது டிஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும். இல்லையெனில், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி ஆகிய படிப்புகளை பிளஸ் 2 தோ்ச்சிக்குப் பிறகு நிறைவு செய்திருத்தல் அவசியம். ஓட்டுநா் பணியிடங்களில் சேர விரும்புவோா் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 - 35 வயதுக்குள்பட்டவா்கள் அந்தப் பணியில் சேரலாம். திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாா்ச் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் எழுத்துத் தோ்வு, மருத்துவத் தோ்வு, நோ்முகத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 87544 35247, 73977 24812 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.