திமுகவின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டி உள்ளது: அமைச்சர் ரகுபதி


திமுகவின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டி உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசை களங்கப்படுத்த பாஜக முயன்று வருகிறது. பாஜகவின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. அதற்கு துணையாக அதிமுக இருக்கிறது. என்சிபி அமைப்பு மூலமாக திமுகவை மிரட்டப் பார்க்கிறார்கள். திமுகவை களங்கப்படுத்த என்.சி.பி. பிரிவை பாஜக ஏவிவிட்டுள்ளது.
திமுகவுக்கு வரும் அனைவரையும் சோதித்து பார்ப்பது என்பது இயலாதது. திமுகவினர் தவறு செய்வது தெரியவந்தால் உடனடியாக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கிறது. திமுக என்றும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடாது. துணை போவோரை கட்சியில் வைத்திருக்க மாட்டோம். இந்தியாவில் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முழுவதுமாக தடுத்து வைத்துள்ளோம். அதிமுக மற்றும் பாஜகவினர் தான் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருப்பவர்கள். நாங்கள் ஜாபர் சாதிக்கை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டோம். திமுகவின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டி உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...