திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு!

கோவையில் நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2024, 10:30 am

DIN

மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் மோடி வாகனப் பிரசாரம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பிதாரிலிருந்து கோவைக்கு மார்ச் 18 ஆம் தேதி பிரதமர் வருகிறார். அன்று கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ். புரம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.