முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்வதாக இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு

கம்பம்: பருவ கால நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆணையகத்தின் தலைமையிலான கண்காணிப்பு குழு அணைப் பகுதிகளில் உறுதி தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தும். 

தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் வரத்து, இருப்பு, வெளியேற்றம், நீர் கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வர்.

திங்கள்கிழமை ஆய்வு நடத்த மத்திய கண்காணிப்பு தலைமை குழு முடிவு செய்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை முதல் தேர்தல் விதி முறைகள் அமல்படுத்தப்பட்டதால் அணையில் ஆய்வு செய்வது ரத்து செய்யப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு ஒத்திவைப்பு
தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் கைது!

இது தொடர்பாக பெரியாறு வைகை பாசன வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளரும், பெரியாறு அணையின் செயற்பொறியாளருமான (பொறுப்பு) ஜே.சாம்இர்வின் கூறியது,

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்யும் நிகழ்வு மறு தேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com