மணிப்பூரில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயணம் 14 மாநிலங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை "இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.
இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மும்பையில் நடைபெறும் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்றிரவே மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார் முதல்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முதல்வர் ஸ்டாலின் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்: அன்புமணி ராமதாஸ்

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

