குடியரசு துணைத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறார் தமிழிசை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறார் தமிழிசை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவர் பதவியை தமிழிசை சௌந்திரராஜன் எதிர்பார்ப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுவாமிதோப்பில் சாமி தரிசனம் செய்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் குடியரசு துணைத் தலைவர் பதவி தருவார்கள் என தமிழிசை நினைக்கிறார். தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார். தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்க வேண்டிக்கொண்டேன் என்றார்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜன் பாஜக தலைமையில் விருப்பம் தெரிவித்தாக சில நாள்களுக்கு முன் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com