/

பாஜகவுடன் பாமக கூட்டணி!

தைலாபுரத்தில் பாமக உயர்மட்டக் குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை.

News image
வடிவேல் ராவணன்
Updated On :18 மார்ச் 2024, 2:18 pm

DIN

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து பட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவுள்ளதாக பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.

சேலம் தேசிய ஜனநாயகக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திண்டிவனம் தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்மட்டக் குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்பிறகு இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடிவேல் ராவணன்,

அதிமுக உடனான கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. பாஜகவுடன் கூட்டணி என்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் தெரியவரும். பாமகவுக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும்.

ஒதுக்கப்படும் தொகுதிகள், வேட்பாளர் விவரங்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.