ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
கோவையில் நடந்த துயரம்: கடன் தொல்லையால் நான்கு பேர் உயிரிழப்பு


கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.
தெலுங்குபாளையம் பகுதியில் மணி ரைஸ் மில் நடத்தி வருகிற ராமச்சந்திரன், தொழில் இல்லாத காரணத்தினாலும் கடன் தொல்லையாலும் அவதியுற்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் ராமச்சந்திரன் அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் குடியிருந்த வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது நான்கு பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் நான்கு பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...