முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரத் திட்டம் அறிவிப்பு!

திருச்சியிலிருந்து மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரத் திட்டம் அறிவிப்பு!

திருச்சியிலிருந்து மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிரசார பயண விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 22ம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 23ம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

மார்ச் 25ம் தேதி திங்கள்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகளிலும்

மார்ச் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதிகளிலும்

மார்ச் 27ம் தேதி புதன்கிழமை தென்காசி, விருதுநகர் தொகுதிகளிலும்

மார்ச் 29ம் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளிலும்

மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும்

மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈரோடு, நாமக்கல், கரூர் தொகுதிகளிலும்

ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய் கிழமை வேலூர், அரக்கோணம்

ஏப்ரல் 3ம் தேதி புதன் கிழமை திருவண்ணாமலை, ஆரணி

ஏப்ரல் 4ம் வெள்ளிக்கிழமை கடலூர், விழுப்புரம்

ஏப்ரல் 5ம் தேதி சனிக் கிழமை சிதம்பரம், மயிலாடுதுறை

ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி

ஏப்ரல் 9 செவ்வாய் கிழமை மதுரை, சிவகங்கை

ஏப்ரல் 10 புதன் கிழமை தேனி, திண்டுக்கல் தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 12 வெள்ளிக் கிழமை திருப்பூர், நீலகிரி

ஏப்ரல் 13 சனிக் கிழமை கோவை, பொள்ளாச்சி

ஏப்ரல் 15 திங்கள் கிழமை திருவள்ளூர் வடசென்னை

ஏப்ரல் 16 செவ்வாய் கிழமை காஞ்சிபுரம், திருபெரும்புதூர்

ஏப்ரல் 17 புதன் கிழமை தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com